ஓடிடி செல்லும் ‛சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்'
ADDED : 1425 days ago
வசந்த் சாய் இயக்கம், தயாரிப்பில் பார்வதி, லட்சுமி பிரியா நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்'. இளையராஜா இசையமைத்துள்ளார். பெண்ணுரிமை பற்றி பேசும் இந்த படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளை வென்றுள்ளது. இந்த படம் ஓடிடியில் வெளியாக போவதாக தகவல்கள் வந்த நிலையில் இப்போது நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக புதிய டிரைலர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதேசமயம் ரிலீஸ் தேதி மட்டும் இன்னும் முடிவாகவில்லை.