ஓடிடியில் வெளியாகும் சாணிக்காயிதம்?
ADDED : 1424 days ago
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன் கதையின் நாயகனாக நடித்துள்ள படம் சாணிக்காயிதம். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து கடந்த ஆகஸ்டு மாதமே தனக்கான டப்பிங் பணிகளை முடித்து விட்டார் செல்வ ராகவன். இந்நிலையில் சாணிக்காயிதம் எப்போதும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், இப்படத்தை தயாரித்துள்ள நிறுவனம் ஓடிடி தளத்தில் வெளியிட பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இப்படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.