அழகின் ரகசியத்தை வெளியிட்ட பூஜா ஹெக்டே
ADDED : 1509 days ago
தற்போது விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்து வரும் பூஜா ஹெக்டே தெலுங்கில் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், தனது உடல் பராமரிப்பு குறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், பெரும்பாலான நேரத்தை தான் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்வதிலேயே செலவிடுவதாக தெரிவித்துள்ளார். அதோடு, ஆரோக்யமான உணவுகளை அதிகமாக எடுத்துக்கொண்டு வருகிறேன்.
முக்கியமாக, ஜிம்மில் எடை தூக்குவது, கடினமான உடற்பயிற்சி செய்வதை விட பைலேட்ஸ் அதிகமாக செய்வதாகவும் தெரிவித்துள்ளார். மும்பை, ஐதராபாத் என எங்கிருந்தாலும் இந்த பைலேட்ஸ் பயிற்சியை ஒருநாள்கூட தவற விடாத பூஜா ஹெக்டே அவ்வப்போது யோகா பயிற்சியிலும் ஈடுபடுகிறேன் என்றும் தனது அழகின் ரகசியம் குறித்து தெரிவித்துள்ளார்.