வெந்து தணிந்தது காடு : மும்பையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு
ADDED : 1470 days ago
விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களைத் தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் வெந்து தணிந்தது காடு. சிம்புவின் 47ஆவது படமான இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை யமைக்க, ஜெயமோகன் திரைக்கதை எழுதியுள்ளார்.
கிராமத்து ஆக்சன் திரில்லர் கதையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு திருச்செந்தூரில் தொடங்கி நடந்து வந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்பை யில் நடைபெற உள்ளது. மொத்தம் 25 நாட்கள் நடைபெறும் இந்த படப்பிடிப்போடு வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு முடிவடைகிறது. இதற்காக தற்போது கெளதம் மேனன் மும்பையில் லொகேசன் பார்க்க சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.