நட்சத்திர வாரிசுகள் மூவர் ஒரே படத்தில் அறிமுகம்
ADDED : 1466 days ago
தென்னிந்திய திரையுலகையும் பாலிவுட்டையும் ஒப்பிடும்போது நட்சத்திர வாரிசுகளின் ஆதிக்கம் அங்கே தான் அதிகம். வருடத்திற்கு ஐந்து பேராவது வாரிசு நடிகர்களாக அறிமுகம் ஆகி வருகின்றனர். அந்தவகையில் லேட்டஸ்டாக மூன்று நட்சத்திர வாரிசுகள் ஒன்றாக இணைந்து ஒரே படத்தில் அறிமுகமாக இருக்கின்றனர். பிரபல இயக்குனர் சோயா அக்தர் தான் இந்தப் படத்தை இயக்க உள்ளார்.
அமிதாப்பச்சனின் பேரன் அதாவது அவரது மகள் ஸ்வேதா பச்சனின் மகன் அகஸ்தியா நந்தா, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூர் மற்றும் ஷாருக்கானின் மகள் சுகானா கான் ஆகிய மூவரும் தான் இந்த நட்சத்திர வாரிசுகள். இந்தப்படம் சோயா அத்தர் எழுதி பிரபலமான ஆர்ச்சிஸ் காமிக்ஸை தழுவி எடுக்கப்படவுள்ளது.