சக நடிகையின் அறுவை சிகிச்சைக்கு உதவிய சமந்தா
ADDED : 1533 days ago
தெலுங்கு சினிமாவில் நாயகியாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து பிரபலமானவர் தேஜஸ்வி மடிவாடா. இவர் தமிழில் நட்பதிகாரம் என்ற படத்தில் நடித்தவர். இவரது அறுவை சிகிச்சைக்கு நடிகை சமந்தா உதவி செய்தது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.
தேஜஸ்வி இதுபற்றி கூறியதாவது, “சிறுவயதிலேயே தாயை இழந்து தந்தை குடிபோதைக்கு ஆளானதால் அனாதையாக வளர்ந்தேன். சினிமாவுக்கு வந்த பிறகும் பல கஷ்டங்களை அனுபவித்தேன். இந்நிலையில் எனக்கு 'டிபி நோய் தாக்கியது. அப்போது ஒரு அறுவை சிகிச்சை செய்து கொள்ள பணம் இல்லாமல் கஷ்டப்பட்டேன். அந்த நேரத்தில் சமந்தா பெரிய மனதுடன் முன்வந்து சொந்த செலவில் எனக்கு அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றினார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.