உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காதலுக்கு வயது தடையில்லை : ராஷ்மிகா தந்த அதிர்ச்சி விளக்கம்

காதலுக்கு வயது தடையில்லை : ராஷ்மிகா தந்த அதிர்ச்சி விளக்கம்

காதலுக்குக் கண்ணில்லை என்பதைத்தான் நாம் அதிகம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், சுல்தான் கதாநாயகி ராஷ்மிகா மந்தனா காதலுக்கு வயதில்லை என்ற புதிய விளக்கம் ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.

தற்போது தெலுங்கில் புஷ்பா, ஹிந்தியில் மிஷன் மஜ்னு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பத்திரிகையாளர் ஒருவர் ராஷ்மிகாவிடம், “உங்களை விட வயது குறைந்தவரை காதலிப்பீர்களா எனக் கேட்டிருக்கிறார்.

அதற்கு ராஷ்மிகா, “நம்மை விட இளையவரைக் காதலிப்பதில் என்ன தவறு இருக்கிறது. காதலுக்கு வயது ஒரு தடையில்லை, மொழியும் தடையில்லை. அவர் நமது எண்ணங்களை மாற்றாதவராக, நம்மிடம் ஆதிக்கம் செய்யாதவராக இருக்க வேண்டும்,” என்று பதிலளித்துள்ளார்.

ராஷ்மிகாவுக்கு இதற்கு முன்பு கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டியுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால், இருவருமே அதை ரத்து செய்துவிட்டனர். அதன்பிறகுதான் தெலுங்கில் பிஸியாக நடிக்க ஆரம்பித்தார் ராஷ்மிகா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !