உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அஜித்தின் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்; இணையத்தில் வைரல்

அஜித்தின் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்; இணையத்தில் வைரல்

நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து எச்.வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடித்து வருகிறார் அஜித். அவருடன் ஹூமா குரேஷி, கார்த்திகேயா, யோகிபாபு, சுமித்ரா என பலர் நடிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார், போனிகபூர் தயாரிக்கிறார். அடுத்தாண்டு பொங்கல் அன்று படம் வெளியாகிறது.

இப்படத்தில் அஜித்திற்கு தம்பியாக நடித்திருக்கிறார் ராஜ் ஐயப்பா. நடிகர் பானு பிரகாஷின் மகனான ராஜ் ஐயப்பா, அஜித்தின் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அஜித்திடம் அனுமதி வாங்கியே இதனை பகிர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

அந்த ஸ்டேட்டஸில், ‛ஏழை, நடுத்தரவர்க்கம், பணக்காரர் என்பது தனி நபரின் பொருளாதார நிலையை குறிக்கிறதே தவிர குணத்தை அல்ல. சமூகத்தின் அனைத்து பிரிவுகளிலும் நல்லவர்கள், கெட்டவர்கள் இருக்கிறார்கள். அதனால் ஒருவரின் பொருளாதார நிலையை வைத்து குணத்தை மதிப்பிடுவதை நாம் நிறுத்த வேண்டும்,' என குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் தலைக்காட்டாத அஜித் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் வைத்துள்ளதை அறிந்த அவரின் ரசிகர்கள் அதனை வைரலாக பரவ செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !