மகன் இயக்கத்தில் ராஜ்கிரண்
ADDED : 1458 days ago
கஸ்தூரிராஜா இயக்குனராக அறிமுகமான என் ராசாவின் மனசிலே படத்தில் நடிகர் ராஜ்கிரணின் நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் 2ம் பாகம் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ராஜ்கிரணின் மகன் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது இயக்க உள்ளார். இது இவரது முதல் படமாகும்.
நடிகர் ராஜ்கிரண், தற்போது லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனைதொடர்ந்து இயக்குனர் முத்தையா இயக்கும் விருமன் படத்தில் கார்த்தியின் தாய்மாமாவாக நடித்து வருகிறார்.