சமந்தா அதிரடி ஆட்டம் - வைரலாகும் வீடியோ!
ADDED : 1504 days ago
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ள சமந்தா, தெலுங்கில் சாகுந்தலம் என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். அடுத்தபடியாக தமிழ், தெலுங்கில் தயாராகும் இரண்டு படங்களில் கமிட்டாகியிருக்கிறார். இந்த படங்களின் படப்பிடிப்புகள் விரைவில் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து ஹிந்தியில் டாப்சி தயாரிக்கும் ஒரு படத்திலும் நடிக்கப் போகிறார் சமந்தா.
மேலும் சோசியல் மீடியாவில் தன்னுடைய போட்டோ, வீடியோக்களை தொடர்ந்து பகிர்ந்து வரும் சமந்தா, தற்போது தான் அதிரடி ஆட்டம் போடும் வீடியோ ஒன்றையும் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை சமந்தாவின் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பெரிய அளவில் வைரலாக்கி வருகிறார்கள். அதோடு, குழந்தைகள் தினமான இன்று குழந்தைகள் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ள சமந்தா, குழந்தைகள் தின வாழ்த்துக்கள். நமது நாட்டின் எதிர்காலம் ஒளிமயமானது என்றும் பதிவிட்டுள்ளார்.