ஆர்யன்கானின் பிறந்தநாளில் 500 மரக்கன்றுகளை நட்ட ஜூகி சாவ்லா!
ADDED : 1466 days ago
பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் சிறை சென்று விட்டு கடந்த அக்டோபர் 28ம் தேதி தான் ஜாமினில் வெளியே வந்தார். அவரது ஜாமினுக்காக ரூ.1 லட்சம் கட்டி கையெழுத்திட்டு அவரை வெளியே கொண்டு வந்தவர் ஷாருக்கானின் நெருங்கிய தோழியான நடிகை ஜூகி சாவ்லா.
இந்த நிலையில் நேற்றைய தினம் தனது 24வது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார் ஆர்யன்கான். இதனையொட்டி அவரது பெயரில் 500 மரக்கன்றுகளை நட்டதாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ஜூகி சாவ்லா. அதோடு ‛பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆரியன். உன்னுடைய ஆசைகள் வரும் ஆண்டுகளில் நிறைவேறட்டும். என்றென்றும் ஆசீர்வதிக்கப்பட்டவராகவும் பாதுகாக்கப்பட்டவராகவும், சர்வ வல்லமை உள்ளவராகவும் இருக்க வேண்டும்,' என்றும் வாழ்த்தி இருக்கிறார்.