டிசம்பர் 3ம் தேதி அதர்வாவின் தள்ளிப்போகாதே ரிலீஸ்!
ADDED : 1420 days ago
ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா, அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள படம் தள்ளிப்போகாதே. 2017ல் தெலுங்கில் நானி, நிவேதா தாமஸ் நடிப்பில் வெளியான நின்னுக்கோரி படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்த படம். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் சில பல காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிக்கொண்டே வந்தது. இந்த நிலையில் தற்போது டிசம்பர் 3ம் தேதி தள்ளிப்போகாதே படம் ரிலீஸ் ஆக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. அது குறித்த ஒரு போஸ்டரை படக்குழு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், பல மாதங்களுக்கு முன்பே ரிலீசுக்கு தயாராகி விட்ட இந்த படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.