தியேட்டருக்கு வரும் கடைசி விவசாயி
ADDED : 1422 days ago
காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை படங்களைத் தொடர்ந்து மணிகண்டன் இயக்கி உள்ள படம் கடைசி விவசாயி. இப்படத்தில் நல்லாண்டி என்ற முதியவர் தான் கதையின் நாயகன். விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இயக்குநர் மணிகண்டனே தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே வெளியீட்டுக்கு தயாராகி விட்டது. கொரோனா பரவல் உள்ளிட்ட சில பிரச்னைகளால் படம் வெளி வருவதில் சிக்கல் நீடித்தது. இதற்கிடையில் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாவதாக கூறப்பட்டது. இந்நிலையில் படம் வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.