கண்மணியாக நயன்தாரா
ADDED : 1503 days ago
காதலர் விக்னேஷ் சிவன் இயக்கம், தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள படம் ‛காத்துவாக்குல ரெண்டு காதல்'. விஜய் சேதுபதி, சமந்தா ஆகியோரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். முக்கோண காதல் கதையாக உருவாகி உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன.
இந்நிலையில் இந்த படங்களின் கேரக்டர் அறிமுக போஸ்டர் உடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டரை காலை முதல் வெளியிட்டனர். ஏற்கனவே விஜய் சேதுபதி நடிக்கும் ராம்போ, சமந்தா நடிக்கும் கதீஜா போஸ்டர்கள் வெளியாகின. மாலையில் நயன்தாரா நடிக்கும் போஸ்டர் வெளியானது. இதில் அவர் கண்மணி என்ற வேடத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு படத்தை அடுத்தமாதம் தியேட்டரில் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.