கர்ப்பகாலத்தில் தண்ணீருக்கு அடியில் போட்டோஷூட் எடுத்த நடிகை
ADDED : 1435 days ago
ஈரநிலம், குடிமகன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நந்திதா ஜெனிபர். பெரும்பாலும் குணச்சித்ரம் மற்றும் ஒரு பாடல்களில் தோன்றி நடித்துள்ளார். கடந்த 2007ல் காசி விஸ்நாதன் என்பவரை திருமணம் செய்தார். அதன்பின் சினிமாவை விட்டு சீரியலில் நடிக்க தொடங்கினார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா என்ற கேரக்டரில் நடித்து வந்தவர் கர்ப்பம் ஆனதால் அந்த சீரியலில் இருந்துவிலகினார். கர்ப்பகாலத்தில் விதவிதமாக தன்னை போட்டோ எடுத்து அதை சமூகவலைதளங்களில் பதிவேற்றி வந்தார். இப்போது நிறைமாத கர்ப்பினியாக இருக்கும் இவர் கணவருடன் நீச்சல் குளத்தில் தண்ணீருக்கு அடியில் போட்டோ ஷூட் எடுத்துள்ளார். இந்த படங்கள் வைரலாகின.