விக்ரமின் 61வது படத்தை இயக்கும் பா.ரஞ்சித்?
ADDED : 1525 days ago
கோப்ரா, மகான், பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் நடித்துள்ள விக்ரம் அடுத்தபடியாக பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆர்யா நடிப்பில் சார்பட்டா பரம்பரை படத்தை இயக்கிய பா.ரஞ்சித் தற்போது நட்சத்திரங்கள் நகர்கிறது என்ற படத்தை இயக்கி வருகிறார். இதுதவிர குதிரைவால், ரைட்டர் போன்ற படங்களையும் தயாரித்து வருகிறார்.
இந்த நிலையில் நட்சத்திரம் நகர்கிறது படப்பிடிப்பு முடிந்ததும் விக்ரம் நடிக்கும் 61வது படத்தை இயக்க போகிறாராம் பா.ரஞ்சித். கடந்த காலங்களில் ரஞ்சித் இயக்கிய பல படங்களுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்த நிலையில் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்க போகிறாராம்.