இயல்பு நிலைக்குத் திரும்பும் சிவராஜ்குமார்
கன்னட திரையுலகின் நட்சத்திர வாரிசுகளில் ஒருவரும் முன்னணி நடிகருமான புனித் ராஜ்குமார் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு திடீர் மாரடைப்பால் காலமானார். இந்த நிகழ்வு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புனித் ராஜ்குமாரின் அண்ணனான சிவராஜ்குமார், புனித் தான் சிறுவயது முதல் தூக்கி வளர்த்த குழந்தை என்பதால் அவரது மறைவால் ரொம்பவே தளர்ந்து போயிருந்தார்.
தற்போது அந்த பாதிப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார் சிவராஜ்குமார். அந்த வகையில் கடந்த அக்டோபர் 29ஆம் தேதி வெளியான அவரது பஜரங்கி-2 படத்தை சமீபத்தில் தனது ரசிகர்களுடன் சேர்ந்து தியேட்டரில் பார்த்து ரசித்துள்ளார். அதுமட்டுமல்ல இந்த படத்தை தொடர்ந்து வேதா என்கிற தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பையும் துவங்கிவிட்டார். ஏற்கனவே சிவராஜ்குமார் நடித்த வஜ்ரகயா பஜ்ரங்கி, பஜ்ரங்கி-2 ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஹர்ஷா தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார். சிவராஜ்குமாரின் சொந்த நிறுவனமே இந்த படத்தை தயாரிக்கிறது.