உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஸ்மார்ட் மூவ் : ராஜமவுலி

ஸ்மார்ட் மூவ் : ராஜமவுலி

ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் இணைந்து நடித்துள்ள ஆர்ஆர்ஆர் படம் வரும் ஜனவரி 7ஆம் தேதி வெளியாக உள்ளது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஆர்ஆர்ஆர் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னும் பின்னும் வேறு சில பெரிய படங்கள் ரிலீஸ் தேதியை அறிவித்து ஒரு வித நெருக்கடியை ஏற்படுத்தின என்றால் இன்னொரு பக்கம் அந்தப் படத்தில் நடித்துள்ள நட்சத்திரங்களின் மற்ற படங்களின் ரிலீஸ் தேதிகளாலும் புதிய நெருக்கடி ஏற்பட்டது.

இந்த படத்தில் ஹீரோக்களில் ஒருவராக நடித்துள்ள ராம்சரண் தனது தந்தை சிரஞ்சீவி நடித்துள்ள ஆச்சார்யா படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அந்த படமும் கிட்டதட்ட ஆர்ஆர்ஆர் படததின் ரிலீஸ் சமயத்திலேயே ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு பின்னர் மாற்றி வைக்கப்பட்டது. அதேபோல இந்த படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், இந்தியில் நடித்துள்ள மே டே என்கிற படமும் கூட இதே சமயத்தில்தான் ரிலீசாக இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்துள்ள ஆலியா பட் தற்போது சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் இந்தியில் கங்குபாய் கத்தியவாடி என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படமும் ஜனவரியில் தான் ரிலீஸாவதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், இதன் ரிலீஸ் தேதியை தற்போது பிப்ரவரி 18க்கு மாற்றி வைத்து அறிவித்துள்ளார்கள். இதையடுத்து இயக்குனர் ராஜமவுலி படத்தின் தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் இப்படி ரிலீஸ் தேதியை பிப்ரவரி மாதம் என அறிவித்தது ஸ்மார்ட் மூவ் என இருவரையும் பாராட்டியுள்ளதுடன் படமும் மிகப்பெரிய வெற்றி பெற தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !