கமலுக்கு வில்லனாகும் டெல்லி கணேஷின் மகன்
ADDED : 1515 days ago
லோகேஷ் கனகராஜ் டைரக்சனில் கமல் நடித்து வரும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப்படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கிறார். பஹத் பாசில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதற்கிடையே இந்தப்படத்தில் அவ்வபோது துணை வில்லன்கள் இணைந்து கொண்டே போகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு நடிகர்கள் சம்பத் ராம் மற்றும் செம்பான் வினோத் ஜோஸ் ஆகியோர் இணைந்தனர். தற்போது மைம் புகழ் கோகுல்நாத் மற்றும் டெல்லி கணேஷின் மகன் மகாதேவன் கணேஷ் ஆகியோரும் கமலுக்கு வில்லனாக நடிக்கிறார்களாம். இத்தனை பேரும் வில்லன்களா என்றால், வில்லன் விஜய்சேதுபதியின் சகோதரர்களாக நடிப்பதால் அவர்களுக்கும் கமலை எதிர்க்கும் வில்லன் வேடம் தான். படத்தில் மொத்தம் 7 வில்லன்கள் என்று சொல்லப்படுகிறது.