பழம்பெரும் நடிகை சரோஜாதேவியை சந்தித்த விஷால்
ADDED : 1515 days ago
எனிமி படத்தை தொடர்ந்து குறும்பட இயக்குனர் து.பா.சரவணன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் திரைப்படம் வீரமே வாகை சூடும். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை அடுத்து அறிமுக இயக்குனர் வினோத்தின் இயக்கத்தில் தற்போது விஷால் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பழம்பெரும் நடிகை சரோஜாதேவியை நடிகர் விஷால், அவரது வீட்டிற்கு சென்று சந்தித்துள்ளார். அவரின் உடல்நலம் குறித்து விசாரித்த பிறகு அவருடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.