மேலும் செய்திகள்
நடிகர் ஜெய்சங்கர் பெயரிலான சாலை திறப்பு
1406 days ago
பாரம்பரியமிக்க ஏவிஎம் தியேட்டர் இடிப்பு
1406 days ago
ரோகித் ஷெட்டி இயக்கத்தில் அக்ஷய்குமார், காத்ரினா கைப் மற்றும் பலர் நடித்து நவம்பர் 5ல் வெளியான ஹிந்திப் படம் 'சூர்யவன்ஷி'. அஜய் தேவகன், ரன்வீர் சிங் நீட்டிக்கப்பட்ட சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. கொரோனா காரமணமாக மூடப்பட்ட தியேட்டர்களை மகாராஷ்டிராவில் ஒரு மாதத்திற்கு முன்புதான் தியேட்டர்களைத் திறந்தார்கள்.
அதற்கடுத்த இரண்டு வாரங்களில் வெளிவந்த 'சூர்யவன்ஷி' படத்தைப் பார்க்க ரசிகர்கள் திரண்டு வந்தது பாலிவுட்டில் மகிழ்ச்சியைக் கொடுத்தது. இப்படம் இந்தியாவில் மட்டும 166 கோடியே 23 லட்சம் வசூலித்துள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
பாலிவுட்டில் இந்த ஆண்டில் வெளிவந்த படங்களில் முதல் முறையாக 100 கோடியைக் கடந்த படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதுமான வசூல் 250 கோடியைக் கடந்திருக்கும் என்கிறார்கள்.
1406 days ago
1406 days ago