உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / படப்பிடிப்பு தளத்திற்கே சென்று சல்மான்கானை சந்தித்த ராஜமவுலி

படப்பிடிப்பு தளத்திற்கே சென்று சல்மான்கானை சந்தித்த ராஜமவுலி

இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் இருவரும் இணைந்து நடித்துள்ள படம் ஆர்ஆர்ஆர். சுதந்திர போராட்ட வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஜனவரி 7ம் தேதி வெளியாக இருக்கிறது. அதற்கான புரமோஷன் பணிகள் தற்போதிருந்தே துவங்கிவிட்டன. இந்த நிலையில் மும்பை சென்ற இயக்குனர் ராஜமவுலி, பாலிவுட் நடிகர் சல்மான்கான் தற்போது நடித்து வரும் படப்பிடிப்பு தளத்திற்கு நேரிலேயே சென்று அவரை சந்தித்து பேசியுள்ளார். சுமார் ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

இதுகுறித்து பாலிவுட் வட்டாரங்களில் சொல்லப்படும்போது, இந்தியாவில் நம்பர் ஒன் ஸ்தானத்தில் இருக்கின்ற இயக்குனர் ராஜமவுலி, பாலிவுட் முன்னணி நடிகரான சல்மான்கானை நேரில் வந்து சந்தித்து இருப்பதை பார்க்கும்போது அவர்கள் இருவரும் அடுத்த படத்திற்காக இணைய இருக்கிறார்கள் என்பது போன்றுதான் தோற்றம் ஏற்படும். ஆனால் உண்மை அதுவல்ல. ராஜமவுலியின் படம் பான் இந்தியா படமாக வெளியாக இருப்பதால், பாலிவுட் ரிலீஸின்போது புரோமோஷன் விஷயத்திலும் படத்தை ரிலீஸ் செய்வதிலும் அவரது உதவியை நாடி வந்திருப்பதாகத்தான் தோன்றுகிறது என்று கூறுகிறார்கள், விரைவில் இது குறித்த தகவல் ஏதாவது வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !