சித்து - ஸ்ரேயா அஞ்சனுக்கு விரைவில் திருமணம்! வைரலாகும் மெஹந்தி வீடியோ
ADDED : 1461 days ago
சித்து மற்றும் ஷ்ரேயா அஞ்சன் ஜோடிக்கு விரைவில் திருமணமாகவுள்ள நிலையில் அவர்களது மெஹந்தி விழா கோலாகலமாக நடைபெற்றது.
சின்னத்திரையில் ஜோடியாக நடிக்கும் ஹீரோ ஹீரோயினாக நடித்து நிஜத்திலும் காதலித்து திருமணம் செய்துகொள்ளும் லிஸ்ட்டில் சித்துவும், ஸ்ரேயா அஞ்சனும் இணைந்துள்ளனர். கலர்ஸ் தமிழின் திருமணம் சீரியலில் ஜோடியாக நடித்த அவர்கள் இருவரும் நிஜத்திலும் காதலிக்க தொடங்கினார்கள். அதை அவர்களே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவும் செய்தனர்.
இந்நிலையில் அவர்களது மெஹந்தி விழா நெருக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் பங்கேற்க கோலாகலமாக நடைபெற்று முடிந்திருக்கிறது. இந்த மெஹந்தி விழா கொண்டாட்டம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சித்து - ஸ்ரேயா அஞ்சன் திருமணம் மிக விரைவில் நடைபெறவுள்ளது.