புஷ்பாவை கைப்பற்றிய லைகா
ADDED : 1410 days ago
அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் படம் புஷ்பா. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சுகுமார் இயக்குகிறார். 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 5 மொழியியில் தயாராகும் இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வருகிற டிசம்பர் 17ம் தேதி இதன் முதல் பாகம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் புஷ்பா படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் வாங்கியுள்ளது. இந்த தகவலை தயாரிப்பு தரப்பு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.