உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அடுத்தடுத்து வெளியாக உள்ள ஜிவி பிரகாஷ்குமார் படங்கள்

அடுத்தடுத்து வெளியாக உள்ள ஜிவி பிரகாஷ்குமார் படங்கள்

தமிழ் சினிமாவில் அதிகப் படங்களில் நடிக்கும் நடிகர்களில் விஜய் சேதுபதிக்கும், ஜிவி பிரகாஷுக்கும்தான் போட்டி. விஜய் சேதுபதி நடித்து இந்த ஆண்டு, “மாஸ்டர், குட்டி ஸ்டோரி, லாபம், துக்ளக் தர்பார், அனபெல் சேதுபதி, முகிழ்” ஆகிய படங்கள் வெளிவந்துவிட்டன.

ஜிவி பிரகாஷ்குமார் நடித்து இந்த ஆண்டில் 'வணக்கம்டா மாப்பிள்ளை' படம் மட்டும் நேரடியாக டிவியில் வெளியானது. அவரது அடுத்த வெளியீடாக டிசம்பர் 3ம் தேதி 'பேச்சுலர்' படம் வெளியாக உள்ளது. அதற்கடுத்த வாரமே 'ஜெயில்' படம் வருமா அல்லது மேலும் ஒரு வாரம் தள்ளி வருமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

ஜிவி பிரகாஷ் நடித்துள்ள 'ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், அடங்காதே, 4 ஜி, இடி முழக்கம்' ஆகிய படங்களும் அடுத்தடுத்து வெளிவர வேண்டும். இவற்றில் எந்தப் படம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது என சம்பந்தப்பட்டவர்கள் சொன்னால்தான் தெரியும்.

மேலே குறிப்பிட்ட படங்கள் அல்லாமல், அவர் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட 'காதலைத் தேடி நித்யா நந்தா, காதலிக்க யாருமில்லை' ஆகிய படங்களின் நிலை தெரியவில்லை.

இதற்கிடையே அவர் நடிக்காத படங்களுக்கும் இசையமைக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார் ஜிவி. 'சர்தார், வாடி வாசல், மாறன்' ஆகியவை அவற்றில் முக்கிய படங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !