விஜய் 66 படம் : வம்சி வெளியிட்ட தகவல்
ADDED : 1412 days ago
தெலுங்கில் மகேஷ்பாபு போன்ற பிரபல நடிகர்களை வைத்து படங்கள் இயக்கியவர் வம்சி பைடிபள்ளி. அதோடு, நாகார்ஜூனா - கார்த்தி இணைந்து நடித்து வெளியான தோழா படத்தையும் இவர் தான் இயக்கியிருந்தார். இந்த நிலையில் விரைவில் விஜய்யின் 66ஆவது படத்தை இயக்க தயாராகிக் கொண்டிருக்கிறார். அப்படம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு விட்ட நிலையில் படப்பிடிப்பு குறித்த முக்கிய அப்டேட் டிசம்பரில் வெளியிடப்படும் என்று ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் இயக்குனர் வம்சி. மேலும் விஜய் 66வது படம் ஆக்சன் படமில்லை. மனித உணர்வுகள் சம்பந்தப்பட்ட ஒரு எமோசனல் படம் என்றும் தெரிவித்துள்ள அவர், கண்டிப்பாக இந்த படத்தில் கூடுதலான சென்டிமென்ட் காட்சிகளும் இடம் பெறும் என்றும் ஒரு அப்டேட் கொடுத்து விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார் வம்சி.