மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
1384 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
1384 days ago
தென்னிந்தியத் திரையுலகத்தில் தெலுங்கு பேசும் மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சினிமா என்பது மக்களின் அன்றாட வாழ்க்கையில் கலந்துவிட்ட ஒன்றாகவே உள்ளது. அங்குள்ள மக்கள் சினிமாவை ரசிக்கும் அளவிற்கு வேறு மாநில மக்கள் ரசிப்பார்களா என்பது சந்தேகம்தான்.
ஆந்திர மாநில அரசு சமீபத்தில் சினிமா தியேட்டர் கட்டணங்களை ஒழுங்குபடுத்தியது. ஒவ்வொரு மாநகரம், நகரம், கிராமம் என டிக்கெட் கட்டணங்களுக்கு குறைந்தபட்ச, அதிகபட்ச கட்டணங்களை நிர்ணயித்தது. அந்தக் கட்டணங்களை குறைந்த கட்டணங்கள் என அவற்றை மாற்ற வேண்டும் என திரையுலகத்திலும் எதிர்ப்புக் குரல் எழுந்தது. ஆனால், அதைப் பற்றியெல்லாம் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசு கண்டுகொள்ளவில்லை. இதனால், பெரிய பட்ஜெட் படங்கள் பெரும் சிக்கலை எதிர்நோக்கி காத்திருக்கின்றன.
இந்நிலையில் ஆந்திரப் பிரதேச சினிமாஸ் ஒழுங்குமுறை திருத்தச் சட்டம் 2021ஐ சட்டமன்றத்தில் நிறைவேற்றியது அரசு. அந்தச் சட்டம் நவம்பர் 12ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன் மூலம் எந்த ஒரு தியேட்டரும் சினிமா டிக்கெட்டை அரசு சார்புடைய ஆன்லைன் மூலமே விற்க வேண்டும், நேரடியாக விற்கக் கூடாது என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொலைபேசி அழைப்பு, இணையதளம், எஸ்எம்எஸ் சேவை ஆகியவற்றின் மூலம் சினிமா டிக்கெட்டுகளைப் பெற முடியும். கூட்டத்தில் நீண்ட நேரம் வரிசையில் நிற்பது, டிக்கெட் வாங்க பயணிப்பது போன்ற சங்கடங்கள் இதன் மூலம் தவிர்க்கப்படும். இதனால் பிளாக்கில் டிக்கெட் விற்பனை தடுக்கப்படும், டிராபிக் பிரச்சினை இருக்காது, சுற்றுச் சூழல் பாதிப்பு இருக்காது. வரி ஏய்ப்பு செய்வது தடுக்கப்படும், அரசுக்கு வர வேண்டிய ஜிஎஸ்டி வரி, சேவை வரி ஆகியவை சரியாக வரும் என அந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் ஆன்லைன் முன்பதிவுக்கென 40 ரூபாய் கட்டணம், அதிகபசட் சினிமா டிக்கெட் கட்டணம் என மக்கள் தியேட்டர்கள் பக்கம் வர முடியாத அளவிற்கு அதிகமாக உள்ளது. ஆந்திர அரசு போல இங்கும் சினிமா டிக்கெட் கட்டணங்களையும், ஆன்லைன் முன்பதிவுகளையும் ஒழுங்குபடுத்த வேண்டுமென சினிமா ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
1384 days ago
1384 days ago