சூர்யாவுடன் மீண்டும் இணையும் கீர்த்தி சுரேஷ்
ADDED : 1416 days ago
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் மூத்த நடிகை மேனகாவின் மகள். தமிழில் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு சிவகார்த்திகேயனுடன் இணைந்து 'ரஜினி முருகன்' படத்தில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து தொடரி, பைரவா, ரெமோ, சாமி 2, சர்க்கார் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான 'நடிகையர் திலகம்' படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக தேசிய விருதை பெற்றார். விரைவில் தொடங்கயிருக்கும் பாலாவின் படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கலாம் என்கின்றனர். இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிப்பதாக செய்திகள் வெளியாகின. சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் இரண்டாவது முறையாக இணைகிறார்.