விஷால் - சிவகார்த்திகேயன் படங்கள் நேரடி மோதல்
ADDED : 1411 days ago
விஷால் நடித்த எனிமி படம் தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்த படத்துடன் வெளியானது. அதையடுத்து தனது வீரமே வாகை சூடும் படத்தை டிசம்பர் 25ல் தமிழ், தெலுங்கில் வெளியிட திட்டமிட்டிருந்தார். ஆனால் அதையடுத்து தெலுங்கில் சங்கராந்தி ஸ்பெசலாக ஆர்ஆர்ஆர், ராதேஷ்யாம் என மெகா படங்கள் வெளியாவதால் தனது படத்தை ஜனவரி 26-ந்தேதி குடியரசு தினத்தன்று வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார் விஷால். இதேநாளில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் படத்தையும் வெளியிட எண்ணி உள்ளனர். இதனால் குடியரசு தினத்தன்று விஷால் - சிவகார்த்திகேயன் படங்கள் நேரடியாக மோதிக் கொள்ளப்போகின்றன.