உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எகிப்தில் ஆண்ட்ரியா சுற்றுலா

எகிப்தில் ஆண்ட்ரியா சுற்றுலா

தமிழில் முன்னணி பாடகியாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இதுவரை ஏராளமான பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார். பன்முக திறமைக்கொண்ட இவர் நடிப்பிலும் கலக்கி வருகிறார். மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, வடசென்னை, தரமணி, மாஸ்டர் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். நடிப்பை தாண்டி சமூக நலனிலும் அக்கறை கொண்டவர். ஆன்ட்ரியா தற்போது மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் நடித்து வருகிறார். மேலும் சில படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.

ஆண்ட்ரியா தற்போது எகிப்து நாட்டில் விடுமுறையை ஜாலியாகக் கொண்டாடி வருகிறார். எகிப்து பிரமிடுகள் பகுதியில் அவர் ஒட்டக சவாரி செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !