ரஷ்யாவில் விக்ரமின் கோப்ரா இறுதிக்கட்ட படப்பிடிப்பு!
ADDED : 1469 days ago
அஜய்ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வரும் படம் கோப்ரா. பலதரப்பட்ட கெட்டப்புகளில் விக்ரம் நடித்து வரும் இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லனாக நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, மாஸ்டர் பட தயாரிப்பாளர்களில் ஒருவரான லலித் குமார் தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ரஷ்யா என நடைபெற்று வந்த நிலையில் இறுதிக்கப்பட்ட படப்பிடிப்புக்காக கோப்ரா படக்குழு மீண்டும் ரஷ்யா சென்றுள்ளது. 15 நாட்கள் இங்கு படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இதோடு கோப்ரா படத்தின் அனைத்துக்கட்ட படப் பிடிப்பும் நிறைவு பெற உள்ளது.