உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி நடித்த கோடியில் ஒருவன் படம் சமீபத்தில் வெளிவந்தது. தமிழரசன், பிச்சைக்காரன் 2, அக்னி சிறகுகள், கொலை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சினிமாவை நையாண்டி செய்த தமிழ் படம் இயக்கிய சி.எஸ்.அமுதன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் பூஜையுடன் நேற்று தொடங்கியது.

இப்படத்தில் ஒரு முன்னணி நடிகையை நடிக்க வைக்க, பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. அது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை இன்பினிடி பிலிம் வென்ஞ்சர்ஸ் நிறுவனம் சார்பில் கமல் போரா, ஜி தனஞ்செயன், பிரதீப் மற்றும் பங்கஜ் போரா ஆகியோர் தயாரிக்கின்றனர். விஜய் ஆண்டனி நடிக்கும் கொலை மற்றும் மழை பிடிக்காத மனிதன் படத்தையும் இவர்கள்தான் தயாரிக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !