உதயநிதிக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த போனிகபூர்
ADDED : 1524 days ago
அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தயாரித்துள்ள போனிகபூர், அஜீத்தின் 61வது படத்தையும் தயாரிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது ஹிந்தியில் வெளியான ஆர்டிகிள்-15 என்ற படத்தின் தமிழ் ரீமேக்கான நெஞ்சுக்கு நீதி என்ற படத்தை உதயநிதி ஸ்டாலினை வைத்து தயாரித்து வருகிறார் போனிகபூர். இந்த படத்தை கனா படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார்.
இந்தநிலையில் நேற்று தி.மு.க இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான நடிகர் உதயநிதி ஸ்டாலின் தனது 44வது பிறந்த நாளை கொண்டாடினார். அதையடுத்து அவரை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து கூறியிருக்கிறார் போனிகபூர்.