திருமண செய்திகளுக்கு பதில் சொல்ல மறுத்த மிருணாள் தாக்கூர்
ADDED : 15 hours ago
சமீபகாலமாக பாலிவுட் நடிகை மிருணாள் தாக்கூரின் தனிப்பட்ட வாழ்க்கையை சுற்றி பலதரப்பட்ட வதந்திகள் பரவிக் கொண்டு வருகிறது. அதில் நடிகர் தனுஷ் உடன் அவரது உறவு மற்றும் திருமணம் பற்றிய யூகங்கள் இந்திய அளவில் சோசியல் மீடியாவில் வந்தது. என்றாலும் இந்த செய்திகளுக்கு இதுவரை எந்த பதிலும் கொடுக்காமல் அமைதி காத்து வரும் மிருணாள் தாக்கூர், தற்போது ஹிந்தியில் தான் நடித்துள்ள தோ திவானே சாகர் மெய்ன் என்ற படத்தை விளம்பரப்படுத்துவதில் தீவிரமடைந்துள்ளார். அப்பட நாயகனான சித்தாந்த் சதுர்வேதியுடன் ஊடக பேட்டிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நேரத்தில் தனுஷ் உடனான திருமண செய்திகள் குறித்து அவரிடத்தில் கேட்ட கேள்விக்கு, நோ கமெண்ட்ஸ், வதந்திகளுக்கு பதில் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளார் மிருணாள்.