வள்ளி திருமணம் புதிய தொடர்: டிசம்பர் 27முதல் ஒளிபரப்பாகிறது
ADDED : 1503 days ago
கலர்ஸ் தமிழ் சேனலின் அடுத்த புதிய தொடர் வள்ளி திருமணம். பொதுவாக வள்ளி திருமணம் என்றால் முருகனுக்கும், வள்ளிக்கும் நடந்த திருமணம் பற்றியதாகத்தான் இருக்கும். கிராமத்து கோவில் திருவிழாக்களில் வள்ளி திருமணம் நாடகம் கண்டிப்பாக நடக்கும். இந்த கதையை மையமாக வைத்து ஸ்ரீவள்ளி என்ற திரைப்படம் அந்த காலத்தில் தயாரானது.
இந்த வள்ளி திருமணம் என்பது கிராமத்து மண் மணம் மாறாத சமூக கதை. தேனி அருகே உள்ள ஒரு கிராமத்தில் பெரிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த செல்லப்பிள்ளை வள்ளி. ஆனால் அவளுக்கு திருமணம் நடக்காமல் தட்டிப்போகிறது. இதற்கு காரணம் வள்ளியிடம் ஒரு மைனஸ் பாயிண்ட் இருக்கிறது. அது என்ன என்பதுதான் தொடரின் சஸ்பென்ஸ்.
இதில் வள்ளியாக யாரடி நீ மோகனி தொடரில் நடித்த நக்ஷத்திரா நடிக்கிறார். வருகிற டிசம்பர் 27ம் தேதி முதல் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது. வாரம்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை இந்த தொடர் ஒளிபரப்பாகும்.