ஓடிடியிலும் வெளியாகும் ஆச்சார்யா
ADDED : 1407 days ago
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம் சரண் முதன்முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் ஆச்சார்யா. இதனால் இந்த படத்திற்கு தெலுங்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. சிரஞ்சீவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். ராம்சரண் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
சோனு சூட், ஜிஸ்ஷு சென்குப்தா, சவுரவ் லோகேஷ், கிஷோர், போசானி கிருஷ்ணா முரளி, தணிகெல்லா பரணி, அஜய், சங்கீதா மற்றும் ரெஜினா கசாண்ட்ரா ஆகியோரும் நடிக்கிறார்கள். தற்போது படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது.
இந்த படம் வருகிற பிப்ரவரி 4ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. அதன் பிறகு அசேமான் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதனை ராம்சரண் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். படம் வெளியான 50 நாட்களுக்கு பிறகு ஓடிடியில் வெளியாகும் என்று தெரிகிறது.