மெட்டுக்கு பாட்டு எழுதுங்கள் : அழைக்கிறார் இளையராஜா
ADDED : 1422 days ago
இசையமைப்பாளர் இளையராஜா தற்போது சமூகவலைதளத்தில் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருக்கிறார். ஒரு பாடலின் சூழலை விளக்கி, அதற்கான மெட்டையும் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த மெட்டுக்குரிய பாடலை எழுதி அனுப்புமாறு அவர் ரசிகர்களை கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தனது காதலியோ அல்லது காதலனையோ சந்திக்க செல்கிறார். அப்போது அங்கு நீங்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நபர் நீண்ட நேரமாக வரவில்லை. அந்த சமயத்தில் உள்ள மனநிலையை கொண்டு பாடல் வரிகளை எழுத வேண்டும். பாடல் வரிகள் எந்த மொழியில் இருந்தாலும் பரவாயில்லை, என்று தெரிவித்துள்ளார்.