தமிழில் மீண்டும் அனுஷ்கா
ADDED : 1411 days ago
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் அனுஷ்கா. இரு மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர். பாகுபலி படங்களுக்கு பின் அவருக்கு பெயர் சொல்லும் படியான படங்கள் அமையவில்லை. பாகமதி படம் சுமாரான வெற்றியை பெற்றது. சைலன்ஸ் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இரு ஆண்டுகளாக நடிப்பில் அதிகம் ஆர்வம் காட்டாத அனுஷ்கா இப்போது தெலுங்கில் ஒரு படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.
இந்நிலையில் மீண்டும் தமிழில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். விஜய் இயக்கிய தெய்வத்திருமகள், தாண்டவம் படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தவர் அனுஷ்கா. நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் விஜய் இயக்கத்தில் ஒரு கமர்ஷியல் கதையில் நடிக்க அனுஷ்கா உள்ளார். ஜனவரியில் இதன் படப்பிடிப்பை துவங்க எண்ணி உள்ளனர்.