மாரி செல்வராஜ் - உதயநிதி படத்தில் நடிக்கும் வடிவேலு
ADDED : 1410 days ago
சுராஜ் இயக்கி வரும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நாயகனாக நடித்து வரும் வடிவேலு, காமெடியனாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களைத் தொடர்ந்து துருவ் விக்ரம் மற்றும் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படங்களை இயக்குகிறார் மாரி செல்வராஜ். இதில், உதயநிதி நடிக்கும் படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் துவங்கி உள்ளன. இந்த படத்தில் வடிவேலுவும் காமெடி கலந்த ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிலும் படத்தின் கிளைமாக்ஸில் வடிவேலுவின் கதாபாத்திரம் மனதை தொடும் வகையில் முக்கியத்துவம் பெறுவதாகவும் கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன் உதயநிதி தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு நேரில் சென்று வடிவேலு வாழ்த்து தெரிவித்தார்.