காதல் இல்லாத வாழ்க்கையா
ADDED : 1409 days ago
இயக்குனர் செல்வராகவன் தற்போது நடிகராகவும் பயணித்து வருகிறார். சாணிக்காயிதம் படத்தை தொடர்ந்து விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடிக்கிறார். இதுதவிர தனது தம்பியும், நடிகருமான தனுஷை வைத்து நானே வருவேன் படத்தையும் இயக்கி வருகிறார். இந்நிலையில் காதல் குறித்து இவர் கூறுகையில், ‛ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மனதை குத்தி, கிழித்து, உடைத்து சுக்கு நுாறாய் போட்ட காதல் ஒன்று இல்லாமல் இருக்காது'' என தனக்கு இருந்த பழைய காதலை நினைவு கூர்ந்துள்ளார்.