கோடியில் ஒருவன் 5ம் தேதி ஒளிபரப்பாகிறது
ADDED : 1405 days ago
ஆள், மெட்ரோ படங்களை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இயக்கிய படம் கோடியில் ஒருவன். இதில் விஜய் ஆண்டனி, ஆத்மிகா, திவ்ய பிரபா, பிரபாகர், சச்சின் கடேகர் உள்பட பலர் நடித்திருந்தார்கள். நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைத்திருந்தார், உதயகுமார் ஒளிப்பதிவு செய்திருந்தார். மகன் கலெக்டர் ஆக வேண்டும் என்று விரும்பிய ஒரு தாயின் கனவை மகன் முதல்வராகி நிறைவேற்றுகிற கதை. கடந்த செப்டம்பர் மாதம் வெளியான இந்தப் படம் இரண்டு மாதங்களுக்கு பிறகு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. வருகிற 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பகல் 1.30 மணிக்கும், மாலை 4.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.