முதல் மலையாள சூப்பர் ஹீரோ படம் : 24ம் தேதி ஒடிடியில் வெளியாகிறது மின்னல் முரளி
ADDED : 1405 days ago
மலையாள சினிமாவின் முதல் சூப்பர் ஹீரோ திரைப்படம் மின்னல் முரளி. பாசில் ஜோசப் இயக்கி உள்ள இந்த படத்தில் டொவினோ தாமஸ் சூப்பர் ஹீரோவாக நடித்துள்ளார். ஒரு மின்னல் தாக்கியதால் சூப்பர் ஹீரோவான முரளி தனக்கு கிடைத்த சக்தியை வைத்து என்ன செய்கிறார் என்பதான் படத்தின் கதை. மலையாளத்தில் தயாராகி இருந்தாலும், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் ஆங்கில மொழிகளிலும் வெளியாகிறது.
இதில் டொவினோ தாமசுடன் குரு சோமசுந்தரம், ஹரிஸ்ரீ அசோகன் மற்றும் அஜு வர்கீஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த சூப்பர் ஹீரோ திரைப்படம் வருகிற டிசம்பர் 24ம் தேதி நெட்பிளிக்சில் வெளியாகிறது. தியேட்டர் அனுபத்திற்காக பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட இந்த படம் ஓடிடியில் வெளியாவது மலையாள ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.