உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அஜித் குரலுடன் தொடங்கும் வலிமை செகண்ட் சிங்கிள்

அஜித் குரலுடன் தொடங்கும் வலிமை செகண்ட் சிங்கிள்

வினோத் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், அஜித், ஹுமா குரேஷி, கார்த்திகேயா மற்றும் பலர் நடிக்கும் படம் 'வலிமை'. இப்படத்தின் முதல் சிங்கிள் 'நாங்க வேற மாரி' மற்றும் படத்தின் முதல் முன்னோட்ட வீடியோ ஆகியவை இதற்கு முன்பு வெளியாகி உள்ளன. அதன்பின் எந்த ஒரு வீடியோவும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் தற்போது வலிமை படத்தின் செகண்ட் சிங்கிள் ப்ரோமோ வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் எழுதியுள்ள பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். 'நான் பார்த்த முதல் முகம் நீ, நான் கேட்ட முதல் குரல் நீ' என அஜித் பேசுவதைத் தொடர்ந்து, பாடலும் அப்படியே ஆரம்பிக்கிறது. இதைக்கேட்ட ரசிகர்கள் அந்த ப்ரோமோவுக்கு நல்ல வரவேற்பை கொடுத்து வருகின்றனர். தொடர்ந்து முழு பாடல் வரும் 5-ம் தேதி மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !