வில்லன் தம்பதிக்கு ஆச்சர்யம் அளித்த அஜித்
ADDED : 1412 days ago
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்திகேயா. இவர் வலிமை படம் மூலம் தமிழுக்கு வில்லனாக அறிமுகமாகிறார். இவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. பல வருடங்களாகக் காதலித்து வந்த தனது கல்லூரித் தோழி லோஹிதாவையே கரம்பிடித்திருக்கிறார். ஐதராபாத்தில் நடந்த திருமணத்துக்கு அஜித் வருவார் எனத் தெலுங்குப் பட உலகினர் எதிர்பார்த்தனர். ஆனால், கார்த்திகேயாவை போனில் அழைத்து வாழ்த்தி மகிழ்ந்திருக்கிறார் அஜித். கூடிய விரைவில் சென்னை வீட்டில் விருந்து அளிப்பதாகவும் அதற்கு கண்டிப்பாக வரவெண்டும் என்றும் அழைப்பு விடுக்க கார்த்திகேயா லோஹிதா தம்பதிக்கு ஆச்சர்யமாம்…