பிப்ரவரியில் எப்.ஐ.ஆர்
ADDED : 1458 days ago
மனு ஆனந்த் எழுதி இயக்கிய எப்.ஐ.ஆர் படத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்க மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான், கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பயங்கரவாதத்தை தழுவி இந்த படம் உருவாகி உள்ளது. படம் முடிந்து வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இப்படம் ஓ.டி.டி.,யில் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் அதை மறுத்த படக்குழு தற்போது வரும் 2022 பிப்ரவரியில் தியேட்டரில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். ஆனால் வெளியிடும் தேதியை கூறவில்லை. இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் வெளியாகிறது.