பாண்டியன் ஸ்டோர்ஸ் தனத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
ADDED : 1413 days ago
சின்னத்திரையில் பல வருடங்களாக நடித்து வருபவர் சுஜிதா தனுஷ். இவர் நடித்த சீரியல்களின் ப்ரிண்டுகள் கூட பழசாகி பழுதாகிவிட்டன. ஆனால், சுஜிதா இன்றும் இளைமையுடன் அழகாக வலம் வருகிறார். நீண்ட நாள் கழித்து தமிழ் சின்னத்திரையில் பாண்டியண் ஸ்டோர்ஸில் நடித்து வரும் சுஜிதா, தமிழ் குடும்பங்களில் பலரது வீட்டில் பாசக்கார மருமகளாக இடம் பிடித்து விட்டார். அவர் தனது இண்ஸ்டாகிராமில் வெள்ளை நிற உடையில் ஏஞ்சல் போல் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.