மகாமுனி - சிறந்த நடிகருக்கான விருது பெற்ற ஆர்யா
ADDED : 1483 days ago
2019ல் சாந்த குமார் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா, மகிமா நம்பியார் உள்பட பலர் நடித்து வெளியான படம் மகாமுனி. தமன் இசையமைத்த இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்தது.
இந்த மகாமுனி படம் இதுவரை 9 சர்வதேச விருதுகளையும், ஒரு போட்டியில் சிறந்த அயல்மொழி திரைப்படத்திற்கான விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்த நிலையில் 15ஆவது அயோத்யா திரைப்பட விழாவில் மகாமுனி படத்தில் நாயகனாக நடித்துள்ள ஆர்யாவிற்கு சிறந்த நடிகருக் கான விருது கிடைத்துள்ளது.
இதுகுறித்து ஆர்யா வெளியிட்டுள்ள செய்தியில், அயோத்யா திரைப்பட விழாவின் 15ஆவது ஆண்டு விழாவில் மகாமுனியில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது மகிழ்ச்சி. இயக்குனர் சாந்தகுமார், இசையமைப்பாளர் தமன், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு எனது நன்றிகள் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.