நடைபாதையில் ஆட்டம் போட்ட பவித்ரா
ADDED : 1461 days ago
விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார் பவித்ரா லெட்சுமி. தற்போது திரைபடங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மாடல் அழகியான பவித்ரா அடிக்கடி சமூகவலைதளத்தில் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிடுவதால், அவருக்கு ரசிகர்களின் கவுண்ட் அதிகமானது. இந்நிலையில் அவர் தற்போது அபார்ட்மெண்ட்களின் நடைபாதையில் தனது தோழிகளுடன் நின்று கொண்டு, சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வரும் டான்ஸ் பாடல் ஒன்றுக்கு சூப்பரான அசைவுகளுடன் நடனமாடியுள்ளார்.