ஆந்திர வெள்ள நிவாரணத்திற்கு பிரபாஸ் ஒரு கோடி நிதி உதவி
ADDED : 1497 days ago
பருவமழையால் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்தது. இதில் மூன்று மாநிலங்களுமே வெள்ளத்தில் மிதந்தது. என்றாலும் பொருள், உயிர்சேதம் ஆந்திராவில் அதிகமாக இருந்தது. திருப்பதி, சித்தூர், நெல்லூர், கடப்பா, அனந்தபூர் ஆகிய பகுதிகளில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. 30க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
இதனால் ஆந்திர அரசு வெள்ள நிவாரண நிதி திரட்டியது. இந்த நிதிக்கு திரைப்பட நட்சத்திரங்கள் சிரஞ்சீவி, அவரது மகன் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், மகேஷ்பாபு ஆகியோர் தலா 25 லட்சம் வழங்கினார். கடந்த ஆண்டு கொரோனா நிதியாக பல கோடிகளை அள்ளிக் கொடுத்த பிரபாஸ் வெள்ள நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்திருக்கிறார்.