ராதே ஷ்யாம் - இரண்டாவது ஹிந்தி பாடல் வெளியீடு
ADDED : 1399 days ago
ராதாகிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் - பூஜாஹெக்டே முதன்முறையாக இணைந்து நடித்துள்ள படம் ராதே ஷ்யாம். அடுத்த ஆண்டு ஜனவரி 14-ந்தேதி திரைக்கு வரும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகிறது. ஹிந்தி தவிர மற்ற மொழிகளுக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள நிலையில், ஹிந்தி பதிப்புக்கு மித்தூன் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் ஒரு பாடல் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில் தற்போது சோச் லியா என்று தொடங்கும் இரண்டாவது ஹிந்தி வீடியோ பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். 24 மணிநேரத்தில் இந்த பாடல் 1.2 கோடி பார்வைகளை கடந்துள்ளது. 5.55 லட்சத்திற்கும் அதிகமானபேர் ரசித்துள்ளனர்.